வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மாலை, இரவில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேவாலாவில் 40 மி.மீ.: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், தேவாலாவில் 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் 30 மி.மீ. நீலகிரி மாவட்டம் நடுவட்டம், கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு ஆகிய இடங்களில் தலா 20 மி.மீ. மழை பெய்தது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மேற்கு மற்றும் தென் மேற்கு திசையில் இருந்தும் தென்தமிழக கடலோரப் பகுதிகளில் தென்மேற்கு திசையில் இருந்தும் பலமான காற்று வீசும். இதுதவிர, வங்கக்கடலின் மத்திய மற்றும் வடமேற்குப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும். எனவே, மீனவர்கள் அந்தமான் நிக்கோபர் தீவுகள், வங்கக் கடலின் மத்திய மற்றும் வடமேற்குப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 93.68 லட்சம்

ஏப்ரல் - ஜூன் காலாண்டு: சிட்டி யூனியன் வங்கிக்கு ரூ.383 கோடி லாபம்

பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு

திருச்சியில் விபிஜே-இன் சிறப்பு நகைக் கண்காட்சி
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


