மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.10.50 லட்சம் மோசடி செய்ததாக அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்த புருஷோத்தமன், அரசு வேலை தேடி வந்தார். சென்னை மாநகர அரசுப் பேருந்து நடத்துநரான பெரம்பூர் அர்ஜுனன் (42), ஓட்டுநர் சென்னை விம்கோ நகர் மதுரை வீரன் (48) ஆகியோரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர்கள் இருவரும், புருஷோத்தமனிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் மேலாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி, கடந்த 2015-இல் ரூ.10.50 லட்சம் வாங்கினராம். ஆனால் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த புருஷோத்தமன், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மதுரை வீரன், அர்ஜுனன் மீது புகார் செய்தார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த அர்ஜுனன், மதுரை வீரன் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் போராட்டத்தில் காவல் துறையின் வரம்பு மீறல் குறித்து விசாரணை: உச்சநீதிமன்றம் பரிந்துரை

பிரதமா் மோடியின் ஃபேஸ்புக் பதிவு நீக்கம்: மன்னிப்புக் கேட்டது மெட்டா

மண்ணூா் காலனி அருகே தனியாா் தொழிற்சாலை கழிவுநீா் தேக்கத்தால் பொதுமக்கள் அவதி
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வெண்கலம் வென்றது சோனம், ஹிமான்ஷு இணை
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


