மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

கருணாநிதி ஒரு தலைசிறந்த தலைவர்: கோபாலபுரத்தில் அஞ்சலி செலுத்திய பிரணாப் முகர்ஜி புகழாரம்

சென்னை கோபாலபுர இல்லத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய பிரணாப் முகர்ஜி, கருணாநிதி தலைசிறந்த தலைவர் என்று புகழாரம் சூட்டினார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

சென்னை கோபாலபுர இல்லத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய பிரணாப் முகர்ஜி, கருணாநிதி தலைசிறந்த தலைவர் என்று புகழாரம் சூட்டினார். 

சென்னை வந்துள்ள பிரணாப் முகர்ஜி கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு வியாழக்கிழமை இரவு 8.40 மணியளவில் வந்தார். அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி ஆகியோர் வரவேற்றனர். 

அங்கு பிரணாப் முகர்ஜி கருணாநிதியின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு ஆறுதல் கூறினார்.

இதையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 

"கருணாநிதியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இயலவில்லை. சென்னைக்கு வர வாய்ப்பு கிடைக்கும்போது, கருணாநிதியின் இல்லத்துக்குச் சென்று, தலைசிறந்த தலைவரான அவருக்கு அஞ்சலி செலுத்த நினைத்தேன்.

எனது குடியரசுத் தலைவர் பதவிக் காலம் முடிந்த பிறகு, இப்போதுதான் முதல்முறையாக சென்னைக்கு வந்துள்ளேன். மு.க.ஸ்டாலின், கனிமொழியைச் சந்தித்துப் பேசியதில் மகிழ்ச்சி.

1970-ஆம் ஆண்டு முதல் கருணாநிதியுடன் நட்பிலிருந்த காரணத்தினால், அவருக்கு எனது அஞ்சலியைச் செலுத்துவதற்காக மட்டுமே இல்லத்துக்கு வந்துள்ளேன். சுமார் 48 ஆண்டுகள் அவருடன் நட்புறவில் இருந்தேன். அந்தச் சமயங்களில் கருணாநிதியைச் சந்திப்பதற்காக அவரது இல்லத்துக்குப் பலமுறை வந்துள்ளேன்" என்றார். 

பிரணாப் முகர்ஜியுடன் தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் உடன் வந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.