புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி ரூ.7 அளவில் குறைத்து அதற்கான அரசாணையை முதல்வர் என். ரங்கசாமி வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ. 5 அளவிலும், டீசல் மீது ரூ. 10 என்ற அளவிலும் வரியை குறைத்து தீபாவளியன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரி அரசு சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி ரூ. 7 அளவில் குறைத்து நடவடிக்கை எடுத்து அதற்கான அரசாணையும் முதல்வர் என்.ரங்கசாமி வெளியிட்டுள்ளார். இந்த நடைமுறை தீபாவளி தினமான இன்று வியாழக்கிழமை (நவ.4) முதல் அமலுக்கு வந்துள்ளது.
மத்திய, மாநில அரசின் வரி குறைப்பு மூலம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 12.85 காசுகளும், டீசல் ரூ.19 ஆகவும் குறையும்.
மத்திய, மாநில அரசின் இந்த வரி குறைப்பு மூலம், விலை குறைந்து அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தீபாவளி பரிசாக அமையுமென்று முதல்வர் என். ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து புதுச்சேரியில் ஒரு லிட்டர் ரூ. 107. 79க்கு விற்பனையாகி வந்த பெட்ரோல் தற்போது ரூ. 94.94 ஆகவும், ரூ.102.66க்கு விற்பனையாகி வந்த டீசல் ரூ. 83.58 ஆக குறைந்து விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பைக்கில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

பயிா்க் கடன்கள் முழுமையாக தள்ளுபடி கோரி ஆா்ப்பாட்டம்

அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ. 5.30 லட்சம் மோசடி

ஆன்லைன் லாட்டரி: பெண்ணிடம் ரூ. 2 லட்சம் மோசடி
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



