காரமடை ரோட்டரி சங்கம் சார்பில் 300 பேருக்கு இலவச கரோனா தடுப்பூசி

காரமடை ரோட்டரி சங்கம், சிக்காரம்பாளையம் தொழிற்கூட்டமைப்பும் இணைந்து ரூ. 3.50 லட்சம் மதிப்பில் 300 பேருக்கு இலவச கரோனா தடுப்பூசி போடப்பட்டது. 
காரமடை ரோட்டரி சங்கமும் சிக்காரம்பாளையம் தொழிற்கூட்டமைப்பும் இணைந்து 300 பேருக்கு இலவச கரோனா தடுப்பூசி போடப்பட்டது. 
காரமடை ரோட்டரி சங்கமும் சிக்காரம்பாளையம் தொழிற்கூட்டமைப்பும் இணைந்து 300 பேருக்கு இலவச கரோனா தடுப்பூசி போடப்பட்டது. 

காரமடை ரோட்டரி சங்கமும் சிக்காரம்பாளையம் தொழிற்கூட்டமைப்பும் இணைந்து ரூ. 3.50 லட்சம் மதிப்பில் 300 பேருக்கு இலவச கரோனா தடுப்பூசி போடப்பட்டது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் ரோட்டரி சங்கமும், சிக்காரம்பாளையம் தொழிற்கூட்டமைப்பும் இணைந்து ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் 300 பொதுமக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசிகள் புதன்கிழமை போடப்ப்பட்டன.

இதற்கு காரமடை ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். முகாமில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் நிற்க வைத்து டோக்கன் வழங்கிய பின் தடுப்பூசிகள் போடப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் காரமடை ரோட்டரி சங்கத்தின் செயலாளர் விஜயபிரபு, பொருளாளர் குருபிரசாத், பட்டையத் தலைவர் சிவசதீஷ், பட்டையச் செயலாளர் மகேஸ், திட்டத் தலைவர் ஜெயப்பிரகாஷ், செளமியா மருத்துவமனை மருத்துவர் செளமியா, சதீஷ் மற்றும் காரமடை ரோட்டரி சங்க நிர்வாகிகள், சிக்காரம்பாளையம் தொழிற்கூட்டமைப்பு நிர்வாகிகள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ரோட்டரி சங்கத்தலைவர் ஞானசேகரன் கூறுகையில், காரமடை ரோட்டரி சங்கத்தின் சார்பாக பொதுமக்களுக்கு இலவசமாக 2,500 கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதையொட்டி இதுவரை 1,300 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்று(புதன்கிழமை) 300 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com