கம்பம்: தேனி மாவட்டம் சுருளி அருவியில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக சுருளி அருவியின் நீர்வரத்து பகுதிகளான அரிசி பாறை, ஈத்தைப்பாறை பகுதி ஓடைகளில் நீர்வரத்து அதிகமாகி, அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்தது.
முதல் நாளான புதன்கிழமை குளிக்கத் தடை விதித்த நிலையில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தினர் குளிக்கத் தடை விதித்தனர்.
அருவி பகுதிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சிலர் சுருளி ஆற்றில் குளித்துச் சென்றனர்.
அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவ வனத்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பயங்கரவாதத் தாக்குதல்? அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளி மாணவி கொலை!
பிலிம் கேமராவில் எடுக்கப்படும் ரஜினி - கமல் திரைப்படம்?
அமெரிக்காவிடம் அதிகளவு ஆயுதங்கள் உள்ளன; எப்போதும் போரிட முடியும்! டிரம்ப் மிரட்டல்!!

விரோஷ் திருமணத்தில் பங்கேற்ற சென்னை புகைப்படக் குழு! இதுவரை வெளியாகாத தகவல்!!
வீடியோக்கள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

