எடப்பாடி பழனிசாமியையும் கே.பி. முனுசாமியையும் கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர் செல்வம், 'கழக சட்ட விதிப்படி ஒன்றரை கோடி தொண்டர்கள், கழக ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்துள்ளார்கள். என்னை நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கோ கே.பி. முனுசாமிக்கோ அதிகாரமில்லை.
நான் இன்று அறிவிக்கிறேன், எடப்பாடி பழனிசாமியையும் கே.பி. முனுசாமியையும் கழக சட்ட விதிக்கு புறம்பாக தன்னிச்சையாக அறிவித்ததற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொண்டு கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குகிறேன்' என்று தெரிவித்தார்.
மேலும், கழக விதிப்படி நீதிமன்றத்திற்குச் சென்று தொண்டர்களுடன் இணைந்து உரிய நீதியைப் பெறுவோம் என்றும் கூறினார்.
முன்னதாக பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார், மேலும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில்... ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல: சிபிஎம் விமர்சனம்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

பிளே ஆஃப்ஸ் போட்டிகளில் சொதப்பும் விராட் கோலி..! முற்றுப்புள்ளி வைப்பாரா?

ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



