மேக்கேதாட்டு விவகாரம்: கர்நாடக முதல்வருக்கு துரைமுருகன் கண்டனம்

மேக்கேதாட்டு தொடர்பாக முதல்வர் ஸ்டாலினின் கடிதத்தை விமர்சித்த கர்நாடக முதல்வருக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். 
மேக்கேதாட்டு விவகாரம்: கர்நாடக முதல்வருக்கு துரைமுருகன் கண்டனம்

மேக்கேதாட்டு தொடர்பாக முதல்வர் ஸ்டாலினின் கடிதத்தை விமர்சித்த கர்நாடக முதல்வருக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மேக்கேதாட்டு அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை கடிதம் எழுதியிருந்தார். 

ஸ்டாலினின் கடிதத்தை 'அரசியல் நாடகம்' என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விமர்சித்திருந்தார். இந்நிலையில் இதற்கு பதில் அளித்துப் பேசி கண்டனம் தெரிவித்துள்ளார் அமைச்சர் துரைமுருகன். 

வேலூர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் கலந்துகொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது, 'காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தடையாக இருப்பதாக கர்நாடக முதல்வர் கூறுகிறார். ஆனால், இந்த விவகாரத்தில் தொடர்ந்து தடையாக இருப்பது கர்நாடக அரசுதான். 

மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சிப்பது சட்டத்திற்கு புறம்பானது. உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்திற்கு தீர்வு காணும் வரை அணை கட்டும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. இதனை அரசியலுக்கும் அவசியமோ, எண்ணமோ தமிழக அரசுக்கு இல்லை. 

தமிழக அரசின் கடிதத்தை 'அரசியல் நாடகம்' என்றும் மத்திய அரசு ஏற்காது என்றும் கூறுகிறார் கர்நாடக முதல்வர். பாஜக ஆட்சி என்பதால் நாங்கள் சொல்வதுதான் நடக்கும் என்று மறைமுகமாகக் கூறுகிறார். உண்மையில் ஒரு முதல்வர் இவ்வாறு பேசுவதற்கு நான் வருத்தப்படுகிறேன். ஆனால், திமுகவை தொட்டால் சும்மாவிடமாட்டோம்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com