
திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர், மகளிர் அணி செயலாளர், பிரச்சாரக்குழு செயலாளர்கள், சமூக வலைதள பொறுப்பாளர்கள், ஆலோசனைக்குழு உள்ளிட்ட பதவிகளுக்கு பொறுப்பாளர்களை நியமனம் செய்து துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின், மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன், மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில், கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி நியமிக்கப்பட்ட நிலையில், மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.