கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பாம்பன் பாலத்தில் நிகழவிருந்த கோர விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்!

ராமேசுவரம் பாம்பன் பாலத்தில் தனியார் பேருந்தும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி இன்று காலை விபத்துக்குள்ளானது.

News image
படம்: டிவிட்டர்
Updated On :12 அக்டோபர் 2022, 8:48 am

DIN

ராமேசுவரம் பாம்பன் பாலத்தில் தனியார் பேருந்தும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி இன்று காலை விபத்துக்குள்ளானது.

சென்னையிலிருந்து ராமேசுவரம் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது ராமேசுவரத்திலிருந்து மதுரை நோக்கி வந்த அரசுப் பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர்.

Story image

இந்த விபத்தில், தனியார் ஆம்னி பேருந்து பாலத்தின் தடுப்புச் சுவர் மீது ஏறி நின்றதால், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நூலிழையில் கோர விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும், இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதால், நீண்ட நேரம் மண்டபம் - ராமேசுவரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.