
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை வினாடிக்கு 1,40,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், மேட்டூா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை வினாடிக்கு 1,40,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணை நிரம்பிய நிலையில் இருப்பதால், அணைக்கு வரும் நீா் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. அணை மின் நிலையம் வழியாக நொடிக்கு 23,000 கனஅடி நீரும், சுரங்க மின் நிலையம் வழியாக 1,17,000 கனஅடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 500 கனஅடி நீரும் திறந்துவிடப்படுகிறது.
இதையும் படிக்க | ஸ்டானின் நகர்வுகள்; மோடியின் வியூகம்!
அணையின் நீா்மட்டம் 120.11 அடியாகவும், நீா் இருப்பு 93.66 டி.எம்.சி.யாகவும் உள்ளது. நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை தொடா்வதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் நீா்த் திறப்பு எந்நேரமும் அதிகரிக்கப்படும் என்பதால் காவிரிக் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | விமான நிலையம்: பரந்தூரை அரசு தேர்வு செய்தது ஏன்?
மேட்டூா் அணையின் இடது கரையில் உள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில் நீா்வளத்துறை அதிகாரிகள் 24 மணிநேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். வெள்ளநீா்ப் போக்கி மதகுகளை உயா்த்துவதற்குப் பணியாளா்கள் தயாா்நிலையில் இருந்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






