இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

குடியரசுத்தலைவர் வருகை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பாதுகாப்புக்குழுவினர் ஆய்வு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பாதுகாப்புக்குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். 

News image
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பாதுகாப்புக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 
Updated On :15 பிப்ரவரி 2023, 9:32 am

DIN

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பாதுகாப்புக்குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகிற பிப்ரவரி 18, 19 தேதிகளில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல்முறையாக தமிழகம் வருகிறார்.

பிப்ரவரி 18-ம் தேதி தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் காலை 11.50 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வரும் முர்மு, மதியம் 12 மணிக்கு மேல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். 

இதையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பாதுகாப்புக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக, குடியரசுத்தலைவரை வரவேற்கும் விதமாகவும் பாதுகாப்பு ஏற்பாடுகளையொட்டியும் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட இரு நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி கண்காணிப்பு கேமராக்கள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

பின்னர், மீனாட்சியம்மன் கோயிலில் இருந்து ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர் கலந்துகொள்கிறார். அதைத்தொடர்ந்து பிப்ரவரி 19-ம் தேதி கோவையிலிருந்து மீண்டும் புறப்பட்டு தில்லி செல்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.