கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

அரசுப் பணிகளில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை: அரசாணை வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணிகளில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமைக்கான சான்றிதழ் வழங்குவது தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு  வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :1 ஜூலை 2023, 7:17 am

DIN

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணிகளில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமைக்கான சான்றிதழ் வழங்குவது தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு  வெளியிட்டுள்ளது. 

கரோனா தொற்றுக்கு பெற்றோர் இரண்டு பேரையும் இழந்தவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

Story image

இந்த நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசாணையாக தமிழ்நாடு அரசு  வெளியிட்டுள்ளது. 

அரசாணையில், அரசுப் பணிகளில் முதல் தலைமுறை பட்டதாரிகள், கரோனா தொற்றுக்கு பெற்றோர் இருவரையும் இழந்து தேர்ச்சி பெற்றவர்கள்,  தமிழ்நாடு அரசுப் பள்ளியில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை மற்றும் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவதற்கான விளக்கமான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.