தமிழ் மக்கள் அதிகம் விரும்பும் சீரியல் கதாபாத்திரங்கள்! டாப் 5 பட்டியல்!!

தமிழில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை தொடர்களில் அதிகம் விரும்பப்படும் கதாபாத்திரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 
தமிழ் மக்கள் அதிகம் விரும்பும் சீரியல் கதாபாத்திரங்கள்! டாப் 5 பட்டியல்!!
Published on
Updated on
2 min read


தமிழில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை தொடர்களில் அதிகம் விரும்பப்படும் கதாபாத்திரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 

தமிழில் உள்ள முன்னணி தொலைக்காட்சிகள் பலவும் சின்னத்திரை தொடர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. தொலைக்காட்சிகளில் அதிக நேரம் ஒளிபரப்பப்படுபவை தொடர்களாகவே உள்ளன. 

தற்போது சின்னத்திரை தொடர்களும் திரைப்பட காட்சிகளுக்கு இணையாக சிரத்தையுடன் எடுக்கப்பட்டு வருகின்றன. சினிமா நட்சத்திரங்களுக்கு இருப்பதைப்போன்று சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம். 

தற்போது தமிழ் மக்கள் அதிகம் விரும்பும் சின்னத்திரை தொடர்களின் கதாபாத்திரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ஓர்மேக்ஸ் என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியாகியுள்ளது. 

அதில் 5வது இடத்தில் இனியா தொடரில் நடித்துவரும் ஆல்யா மானசா (இனியா பாத்திரம்) இடம்பெற்றுள்ளார். அதில் அவர் சுட்டித்தனத்துடன் செயல்பட்டாலும், சிக்கல்களை சமாளிப்பதில் தெளிவாகவும் செயல்படுவார். 

பட்டியலில் 4வது இடத்தில் எதிர்நீச்சல் தொடரில் வில்லன் பாத்திரத்தில் நடித்துவந்த மாரிமுத்து (ஆதி குணசேகரன் பாத்திரம்) இடம்பெற்றுள்ளார். இவரின் நகைச்சுவை கலந்த வில்லத்தனம் செய்வது ரசிகர்கள் பலரைக் கவர்ந்துள்ளது. 

3வது இடத்தில் சன் தொலைக்காட்சியின் சுந்தரி தொடரின் கேப்ரியல்லா (சுந்தரி பாத்திரம்) இடம்பெற்றுள்ளார். கிராமத்துப் பெண்ணாக இருக்கும் சுந்தரி, கணவனால் ஏமாற்றப்பட்டது தெரிந்தும் அதற்காக அழுது வருந்திக்கொண்டு இருக்காமல், பெரும்பாடுபட்டு படித்து ஆட்சியராகியது பலரைக் கவர்ந்துள்ளது. 

2வது இடத்தில் விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி தொடரில் நடித்துவரும் கே.எஸ். சுசித்ரா (பாக்கியலட்சுமி பாத்திரம்) இடம்பெற்றுள்ளார். திருமணத்துக்கு பிறகும் மகனை திருமணம் செய்துகொடுத்த பிறகும் தான் படிக்க வேண்டும் என்று முயற்சித்துவரும் பாக்கியலட்சுமி பலரைக் கவர்ந்துள்ளார்.

முதலிடத்தில் கயல் தொடரின் சைத்ரா ரெட்டி (கயல் பாத்திரம்) இடம்பெற்றுள்ளார். அண்ணன், தம்பி, தங்கைகள், அம்மா என ஒட்டுமொத்த குடும்பத்தையும் தாங்கும் தகப்பனாக கயல் இருந்து வருகிறார். 

மக்கள் மனம் கவர்ந்த சின்னத்திரை பாத்திரங்களில் ஒரே ஒரு ஆண் இடம்பெற்றுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒரு பாத்திரமும், சன் தொலைக்காட்சி தொடர்களில் 4 பாத்திரங்களும் மக்கள் மனங்களைக் கவர்ந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com