முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு முதலாமாண்டு சேர விரும்புவோர், செப்.25 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (எம்.எட்.,) முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை செப்.25 முதல் செப்.30 வரை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.
விண்ணப்பம் பதிவு செய்ய ஒவ்வொரு கல்லூரிக்கும், விண்ணப்பக் கட்டணம் ரூ.58 மற்றும் விண்ணப்ப பதிவுக் கட்டணம் ரூ.2/. மொத்தம் ரூ.60/. (ரூபாய் .அறுபது மட்டும்) செலுத்தப்படவேண்டும். SC/SCA/ ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப பதிவுக்கட்டணம் ரூ.2/- (ரூபாய் இரண்டு மட்டும்) செலுத்தினால் போதுமானது. மாணாக்கர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தெரிவு செய்தல் வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card / Credit Card / Net Banking / UPI மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் “ The Director, Directorate of Collegiate Education, Chennai – 15” என்ற பெயரில் 25.09.2023 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.
மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
இதையும் படிக்க: தமிழக உள்துறை செயலாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!
இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணவர்கள் 93634 - 62070, 93634 - 62007, 93634 - 62042, 93634 - 62024 என்ற தொடர்பு எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.