
திருவாரூர் மாவட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் பிப்ரவரி 22ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து நாளை திருச்சிக்கு விமானத்தில் செல்லும் முதல்வர் ஸ்டாலின், மன்னார்குடியில் நடைபெறும் திமுக பிரமுகரின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பிப்ரவரி 22ஆம் தேதி பங்கேற்கிறார்.
தொடா்ந்து, திருவாரூா் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டு வரும் கலைஞா் அருங்காட்சியகம், மணிமண்டபம் அமைக்கும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்வார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | மோடியின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்த மேகாலயா அரசு!
இந்நிலையில், முதல்வர் வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







