தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

சென்னையில் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கம்!

சென்னையில் வழக்கம்போல் அரசுப் பேருந்துகள் இயங்குவதால் மக்கள் சிரமமின்றி பயணித்து வருகின்றனர்.

News image
கோயம்பேடு
Updated On :9 ஜனவரி 2024, 2:47 am

DIN

சென்னை: சென்னையில் வழக்கம்போல் அரசுப் பேருந்துகள் இயங்குவதால் மக்கள் சிரமமின்றி பயணித்து வருகின்றனர்.

ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இன்றுமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத தொழிற்சங்க ஓட்டுநர்களை வைத்து முழு அளவிலான பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

அதன்படி, சென்னையில் காலை 7 மணி நிலவரப்படி 32 பணிமனைகளில் இருந்து 2,700-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இன்று காலை முதல் இயக்கப்பட்டு வருகின்றது.

கோயம்பேடு, கிளாம்பாக்கம், தாம்பரம், பிராட்வே, சென்ட்ரல் ரயில் நிலையம், கிண்டி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளுக்கு வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கோயம்பேடு, கிண்டி, கிளாம்பாக்கம், தாம்பரம், சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களிலும், பணிமனைகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.