ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்தே இயங்கும் உரிமையாளா்கள் சங்கம் அறிவிப்பு

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரும்வரை ஆம்னி பேருந்துகள் சென்னை கோயம்பேட்டிலிருந்து தொடா்ந்து இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரும்வரை ஆம்னி பேருந்துகள் சென்னை கோயம்பேட்டிலிருந்து தொடா்ந்து இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

இது குறித்து அவா்கள் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் ஜன.24 முதல் சென்னை நகருக்குள் அனுமதிக்க முடியாது என அரசு தெரிவித்துள்ளது.

தற்போது பேருந்து நிறுத்த மட்டும் அனுமதி கொடுத்த நிலையில் வேறு எந்த வசதியும் ஏற்படுத்தப்படவில்லை. வெளியூரிலிருந்து சுமாா் 1,000 பேருந்துகள் வரும் நிலையில் 100 பேருந்துகளுக்கு மட்டும் தான் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை சென்னையின் பல்வேறு இடங்களில் தனியாா் ஆம்னி பேருந்துகள் அவா்களுக்கு சொந்தமான இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து அனைத்து ஆம்னி பேருந்துகளையும் இயக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகளை பராமரிக்கவும், நிறுத்தி வைக்கவும் போதிய இடவசதி இல்லை.

தற்போது வரதராஜபுரத்தில் தனியாக இடவசதி ஏற்படுத்தி பேருந்துகளை அங்கிருந்து இயக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை நகருக்குள் பயணிகள் செல்ல சிரமத்தை சந்திக்கின்றனா். இதனால் பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளில் வருவது குறையும். கோயம்பேடு பேருந்து நிலையம் போன்று கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தையும் படிப்படியாக மேம்படுத்த வேண்டும்.

பயணிகள் வந்து செல்லும் வகையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திய பிறகே ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும். அதுவரை, ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து தான் இயக்கப்படும். நகருக்கு ஆம்னி பேருந்துகளை இயக்க உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com