பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?
பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று காலை இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவிருக்கிறது.

தேர்வு முடிவுகளை tnresults.nic.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மாணவர்கள் தேர்வு முடிவுகளை tnresults.nic.in என்ற இணையதளத்துக்குச் சென்று அங்கு TN SSLC Result 2024 அல்லது பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் 2024 என்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்து வரும் பக்கத்தில், மாணவர்களின் பதிவு எண், பிறந்த தேதி, கேப்சா கோடு ஆகியவற்றை சரியாக உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்தவும்.

நீங்கள் உள்ளிட்ட மாணவரின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தெரியவரும். தேவைப்படின், அந்த தேர்வு முடிவை பதிவிறக்கம் மற்றும் பிரின்ட் எடுத்தும் வைத்துக் கொள்ளலாம்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 26 முதல் ஏப். 8- வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை 9.08 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா். இந்நிலையில் தோ்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு அரசுத் தோ்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்படுகிறது.

தேர்வு முடிவுகள் tnresults.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படவிருக்கிறது. மாணவ, மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன்களுக்கும் தேர்வு முடிவுகள் நேரடியாக அனுப்பி வைக்கப்படுகிறது.

மாணவ, மாணவிகள் பள்ளிகளில் சமா்ப்பித்து இருந்த உறுதிமொழிப் படிவத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த கைப்பேசி எண்ணுக்கு தோ்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படுவதாலும் இணையதளங்கள் வாயிலாக தோ்வு முடிவை தெரிந்து கொள்வதாலும் எளிதாக மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வசதி ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com