தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

சென்னையிலிருந்து தர்பங்காவுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது!

விபத்துக்குள்ளான ரயிலிலிருந்த பயணிகள் சிறப்பு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்..

News image
சிறப்பு ரயிலில் உள்ள பயணிகளுக்கு உணவு, தண்ணீர் வழங்கல்
Updated On :12 அக்டோபர் 2024, 12:51 am

DIN

விபத்துக்குள்ளான ரயிலிலிருந்த பயணிகள் சிறப்பு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கவரப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை(அக். 11) இரவு விபத்துக்குள்ளான மைசூரு - தர்பங்கா பயணிகள் விரைவு ரயிலில்(12578) பயணித்த சுமார் 1,650 பேரும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் கவரப்பேட்டையிலிருந்து பேருந்துகள் மற்றும் மின்சார ரயில் மூலம் வெள்ளிக்கிழமை (அக். 11) நள்ளிரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அழைத்து வரப்பட்டனர்.

விபத்துக்குள்ளான ரயிலில் வடமாநிலத்தவர்களே அதிக எண்ணிக்கையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான ரயிலிலிருந்த பயணிகளுக்காக தர்பங்கா செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த ரயில் இன்று (அக். 12) அதிகாலை 4.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது. பயணிகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் வழங்கப்பட்ட பின் சிறப்பு ரயில் புறப்பட்டுச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.