சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ. 80 உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 58,000-ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்ட நிலையில், தொடர்ந்து விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.
நேற்று விலை சற்றே குறைந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 58,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் (22 காரட்) தங்கம் ரூ. 10 உயர்ந்து ரூ.7,295-க்கு விற்பனை ஆகிறது.
மேலும், 24 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 7,750-க்கும், ஒரு சவரன் ரூ. 62,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க | கருப்பை வாய்ப் புற்றுநோய்: சென்னையில் மறுக்கப்படும் பரிசோதனை?
வெள்ளி விலை
ஒரு கிராம் வெள்ளி ரூ. 3 குறைந்து ரூ. 107-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,07,000-க்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது.
அதிகபட்சமாக கடந்த அக். 23 அன்று ஒரு கிராம் வெள்ளி 112-க்கு விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.