
போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மதுபானக் கூடத்தில் அடிதடியில் ஈடுபட்டதாக அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் நிா்வாகி பிரசாத் உள்ளிட்ட பலா் கடந்த மாதம் 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவருக்கு போதைப்பொருள் வழங்கிய சேலம் சங்ககிரி பகுதியைச் சோ்ந்த பிரதீப்குமாா் என்ற பிரடோ, சா்வதேச போதைப் பொருள்கடத்தல் கும்பலைச் சோ்ந்த மேற்கு ஆப்பிரிக்காவின் கானா நாட்டைச் சோ்ந்த ஜான் ஆகிய இருவரையும் கடந்த 19-ஆம் தேதி நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மையம் அருகே வைத்து கைது செய்தனா்.
அவர் அளித்த தகவலின் அடிப்படையில், பிரபல திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் மருத்துவப் பரிசோதனையில் அவர் கொக்கைன் பயன்படுத்தியது உறுதியானதையடுத்து கைது செய்யப்பட்டார்.
பிரதீப் அளித்த தகவலின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தற்போது காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் பயன்படுத்தினரா என்பது விசாரணையில் தெரியவரும்.
இதனிடையே அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்தான் தன்னை போதைப்பொருள் பயன்படுத்த பழக்கப்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த், காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். படத்தில் நடித்ததற்காக தனக்கு தர வேண்டிய ரூ. 10 லட்சத்திற்கு கொக்கைன் கொடுத்ததாகவும் பின்னர் தானே அதற்கு அடிமையானதாகவும் கூறியுள்ளார்.
நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7 வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | போதைப் பொருள் வழக்கு: நடிகா் ஸ்ரீகாந்த் கைது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.