/

பட்ஜெட் ஒளிபரப்பப்பட்ட எல்இடி திரையில் ஆங்கிலத்தில் ஒளிபரப்பான சீமான் பேட்டி!

பட்ஜெட் ஒளிபரப்பப்பட்ட எல்இடி திரையில் ஆங்கிலத்தில் சீமானின் பேட்டி ஒளிபரப்பட்டதால் மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

News image
பட்ஜெட் ஒளிபரப்பப்பட்ட எல்இடி திரையில் ஆங்கிலத்தில் ஒளிபரப்பான சீமான் பேட்டி..
Updated On :14 மார்ச் 2025, 7:54 am

DIN

கோயம்புத்தூரில் பட்ஜெட் ஒளிபரப்பப்பட்ட எல்இடி திரையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் செய்தியாளர் சந்திப்பு ஆங்கில மொழியில் ஒளிபரப்பட்டதால் மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று காலை(மார்ச் 14) தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக சென்னையின் 100 இடங்களில் காணொலி காட்சி வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்வதாக சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது.

அதன்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்ட்ரல் ரயில் நிலையம், முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு பேருந்து நிலையம், மெரினா கடற்கரை, பாண்டிபஜார் சாலை, கத்திப்பாரா பூங்கா, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, டைடல் பார்க் சந்திப்பு உள்ளிட்ட 100 இடங்களில் ஒளிபரப்பப்பட்டன.

இந்த நிலையில், கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பட்ஜெட் ஒளிபரப்பப்பட்ட எல்இடி திரையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் செய்தியாளர் சந்திப்பு ஆங்கில மொழியில் ஒளிபரப்பட்டதால் மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் அவர்கள் இதனை குழப்பத்துடன் பார்த்துச் சென்றனர்.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.