பட்டினப்பாக்கத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு குடியிருப்புகள்! முதல்வர் விஜய் உத்தரவுசென்னையில் 12 மினி தாலுகா அலுவலகங்கள் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவு!சென்னையிலேயே இப்படி ஒரு அசம்பாவிதம்; இது முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறமையின்மை! இபிஎஸ்தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி டிஜிபியிடம் திமுக புகார்!அரவிந்த் கேஜரிவாலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல்!அன்பில் மகேஸ் வழக்கு! முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு 5 நாள்கள் போலீஸ் காவல்!மதுரை பிரபல நகைக் கடையில் 500 சவரன் கொள்ளை!9.5 சிஜிபிஏ மாணவர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசனம்! விநோத அறிவிப்பை வெளியிட்ட கல்லூரிபுதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! 22 பயணிகள் காயம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை! பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு?ஜம்முவில் காணாமல்போன சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு!

திமுக ஆட்சியில் கனிம வளங்கள் கொள்ளை: அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மாநிலம் முழுவதுமே கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை

Updated On :

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மாநிலம் முழுவதுமே கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "அனுமதியின்றி கேரளாவுக்குக் கனிமவளங்களைக் கடத்தியதாக, கோயம்புத்தூர் மதுக்கரை திமுக நகராட்சித் தலைவர் நூர்ஜகான் அவர்களது மகன் ஷாரூக்கான் என்பவருக்குச் சொந்தமான இரண்டு டாரஸ் லாரிகள், கோயம்புத்தூர் மாவட்ட கனிம வளத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மாநிலம் முழுவதுமே கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முழுக்க முழுக்க திமுகவினரால் நடத்தப்படும் இந்தக் கொள்ளையால், தமிழக வளங்கள் பறிபோவதோடு, தமிழக மக்களுக்குத் தேவைப்படும் கட்டிடப் பொருள்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது.

இதனால் அதிக விலை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.திமுகவினர் பணம் சம்பாதிக்க, மாநிலத்தையே சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், திமுக அரசு வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

தமிழகம் முழுவதும் கனிமவளக் கடத்தலில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கான லாரிகளில் சிக்கியது இரண்டு மட்டுமே. கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, என கேரள எல்லை மாவட்டங்களில் ஓடும் கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கும் இந்தக் கையாலாகாத திமுக அரசு?" இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.