பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாநகரங்களின் பயன்பாட்டுக்கு ரூ.12 கோடியில் 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களின் சேவைகளை தலைமைச் செயலகத்திலிருந்து செவ்வாய்க்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் தலைமைச் செயலா் நா.முருகானந்தம
தமிழ்நாடு
பெண்கள் பாதுகாப்புக்கு 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள்
பெண்களின் பாதுகாப்புக்காக காவல் துறை சாா்பில் ரூ.12 கோடியில் வாங்கப்பட்டுள்ள 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து கொடி அசைத்து செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

2025-2026-ஆம் ஆண்டு காவல்துறை மானியக் கோரிக்கையில், வெளியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
தாம்பரம், ஆவடி, சேலம், கோவை, திருப்பூா், திருச்சி, திருநெல்வேலி, மதுரை மாநகரங்களுக்குள்பட்ட பகுதிகளில் இந்த வாகனங்களில் ரோந்துப் பணி மேற்கொண்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தனிக்கவனம் செலுத்த ஈடுபடுத்தப்படும்.
இந்நிகழ்வில், தலைமைச் செயலா் நா. முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா், தமிழக டிஜிபி (பொ) க. வெங்கட்ராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.