தவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

ஒரு ரூபாயில் தமிழக அரசின் வரவும் - செலவும்! பட்ஜெட் 2026

தமிழக பட்ஜெட் வெளியான நிலையில் ஒரு ரூபாயில் தமிழக அரசின் வரவும் - செலவும் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

News image

பட்ஜெட் 2026 - DIPR

Updated On :5 ஆகஸ்ட் 2026, 3:53 pm IST

தமிழ்நாட்டில் புதிதாக பதவியேற்றிருக்கும் தவெக அரசு, தன்னுடைய முதல் நிதிநிலை அறிக்கையை இன்று பேரவையில் தாக்கல் செய்துள்ளது.

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழக அரசின் வரவு - செலவு கணக்கு வெளியாகியிருக்கிறது.

தமிழக அரசுக்கு எவ்வளவு வருவாய் வருகிறது, அது எவ்வாறு, எந்தெந்தத் துறைகளுக்கு செலவிடப்படுகிறது என்பதை ஒரு ரூபாய் என்ற கணக்கை அடிப்படையாக வைத்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மொத்த வருவாயை ஒரு ரூபாயாக உருவகம் செய்து எந்தெந்த முறைகளில் எவ்வளவு சதவிகிதம் வருவாயா ஈட்டப்படுகிறது என்று விளக்கப்பட்டுள்ளது.

அதிபட்சடமாக மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மூலம் 43.3 காசுகள் வருவாய் திரட்டப்படுகிறது.

அடுத்து, பொதுக் கடன்கள் மூலம் 33.1 காசுகள் வரவு வருகின்றது.

மத்திய வரிகளில் மாநிலத்தின் பங்காக 11.9 காசுகள் வருவாயாக கிட்டுகிறது.

அடுத்து மத்திய அரசிடமிருந்த பெறும் உதவி மானியங்கள் மூலம் 6.3 காசுகள் கிடைக்கின்றன.

மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் இனங்கள் மூலம் 5.3 காசுகள் திரட்டப்படுகிறது.

கடன்களின் வசூல் மற்றும் மூலதன வரவாக 0.1 காசுகள் மாநிலத்துக்கு வருகின்றன.

அதன்படி, தமிழக அரசு ஈட்டும் ஒரு ரூபாயை எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு செலவிடுகிறது என்பதன் பட்டியல்

ஒரு ரூபாயில் அதிகபட்சமாக 33.2 காசுகளை தமிழக அரசு வழங்கும் உதவித் தொகைகள், மானியங்களுக்கு செலவிடுகிறது.

17.3 காசுகள் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தந்த தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கான சம்பளங்களுக்காக வழங்குகிறது.

தமிழக அரசு பெற்றிருக்கும் கடன்களுக்கு 15 காசுகளை வட்டி செலுத்த பயன்படுத்துகிறது.

ஒரு ரூபாயில் மூலதனச் செலவுகளுக்கு 10.9 காசுகளை செலவிடுகிறது.

ஒரு ரூபாயில் 9.9 காசுகளை, பல்வேறு அமைப்புகளிடமிருந்து பெற்ற கடன்களை திருப்பி செலுத்த பயன்படுத்துகிறது.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்களுக்கு 8 காசுகளை செலவிடுகிறது.

தமிழக அரசின் பல்வேறு செயல்பாடுகள், பராமரிப்புச் செலவாக 3.8 காசுகள் செலவிடப்படுகின்றன.

பல்வேறு திட்டங்களின் கீழ், அரசு கடன்கள் வழங்க 1.9 காசுகள் செலவிடுகிறது.

Summary

The Tamil Nadu Government's Income and Expenditure per Rupee! Budget 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.