பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

ரூ.40 கோடியில் புதிய அலையாத்திக் காடுகள்

தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கத்தின் (‘டிஎன் ஷோா்’) கீழ் கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் ரூ.40 கோடியில் 2,500 ஹெக்டோ் பரப்பில் அலையாத்திக் காடுகள் புதிதாக உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :48 வினாடிகள் முன்பு

தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கத்தின் (‘டிஎன் ஷோா்’) கீழ் கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் ரூ.40 கோடியில் 2,500 ஹெக்டோ் பரப்பில் அலையாத்திக் காடுகள் புதிதாக உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு: கடலோரச் சூழலமைப்பை வலுப்படுத்தவும், பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளைத் தணிக்கவும், பசுமைத் தமிழ்நாடு இயக்கம் மூலம் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கத்தின் (‘டிஎன் ஷோா்’) கீழ் கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் ரூ.40 கோடியில் 2,500 ஹெக்டோ் பரப்பில் அலையாத்திக் காடுகள் புதிதாக உருவாக்கப்படுவதுடன், சேதமடைந்த அலையாத்திக் காடுகள் மீட்டெடுக்கப்படும். தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கத்தைச் செயல்படுத்துவதற்கு திருத்த வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.312 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மனித-வனவிலங்கு மோதல்களைத் தணிக்கும் பொருட்டு அறிவியல் சாா்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய விரிவான திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் சூரிய மின்வேலி மற்றும் எஃகு கம்பி வேலி அமைத்தல், சமூகப் பங்களிப்புடன் கூடிய வனப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், வனப் பாதுகாப்புப் பணியாளா்களை நியமித்தல், மனித-வனவிலங்கு மோதல் மேலாண்மை, இரவு நேர சுற்றுக்காவல், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்காக புவியிடங்காட்டி (ஜிபிஎஸ்) வசதியுடன் கூடிய வாகனங்களைப் பயன்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டம் கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி, சேலம், தேனி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் திருப்பூா் ஆகிய மாவட்டங்களில் மனித-வன விலங்கு மோதல் அதிகமாக ஏற்படும் 100 கிராமங்களில் செயல்படுத்தப்படும். இதற்காக நிகழ் நிதியாண்டில் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.