நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

நேபாள வெள்ளம்: ஒன்றிய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட முக ஸ்டாலின் கோரிக்கை!

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசும் மாநில அரசும் விரைந்து செயல்பட வேண்டும் என முக ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

MK Stalin

திமுக தலைவர் ஸ்டாலின் - கோப்புப்படம்

Published On :26 ஆகஸ்ட் 2026, 9:07 pm IST

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசும் மாநில அரசும் விரைந்து செயல்பட வேண்டும் என முக ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தின் கோஷி ஆற்றில் இன்று (ஆக. 26) ஏற்பட்ட வரலாறு காணாத திடீர் வெள்ளத்தில், அங்கு சுற்றுலா சென்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 36 பெண்கள் உள்பட 57 பேர் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, நேபாளத்தில் சிக்கியுள்ள 57 தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பல்வேறு அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக ஊடகப் பதிவில், “நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன. பல்வேறு மனித உயிர்கள் பலியாகியிருக்கும் சூழலில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அங்கு சிக்கியிருக்கின்றனர். ஒன்றிய அரசும் மாநில அரசும் விரைந்து செயல்பட்டு, நமது மக்கள் பத்திரமாகத் தாய்நாடு திரும்ப வேண்டுமென்று விழைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல, முக ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் மத்திய அரசு சார்பில் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு திமுக எம்பி தயாநிதி மாறன் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் தனது கடிதத்தில், “திமுக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 50 பேர் உள்பட இந்தியப் பயணிகள் அனைவரையும் மீட்டுப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வர உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சரிடம் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “சாலைகள், பாலங்கள் சேதமடைந்து, தகவல் தொடர்பு முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ள மக்களைக் கண்டறிந்து மீட்கவும், அவர்களைப் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வரவும் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியத் தூதரகம் மற்றும் மீட்புக் குழுவினரை நான் வலியுறுத்துகிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Summary

M.K. Stalin has urged the Union and State governments to act swiftly to rescue Indians stranded in the severe floods in Nepal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.