சென்னை மெரீனா கடற்கரை அருகே உள்ள காமராஜர் சாலையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை இன்று(திங்கள்கிழமை) நடைபெற்றது.
வருகிற ஜன. 26 ஆம் தேதி குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முப்படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெறும்.
சென்னையில் மெரீனா கடற்கரை அருகே உள்ள காமராஜர் சாலையில் குடியரசு தின விழா நடைபெற உள்ளது.
இதையொட்டி குடியரசு தின அணிவகுப்பின் முதல் ஒத்திகை இன்று அதிகாலை நடைபெற்றது.
ராணுவம், கடற்படை, ராணுவ கூட்டுக் குழல், வான்படை, காவல்துறையினரின் சிறப்பு அணிவகுப்பு ஒத்திகைகள் நடைபெற்றன.
பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளின் ஒத்திகையும் நடைபெற்றது.
தொடர்ந்து ஜன. 21, 23 ஆம் தேதிகளிலும் அதிகாலையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.