தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் பெரும்பாலான அமைச்சர்கள் தோல்வி முகத்தையே சந்தித்து வருகிறார்கள்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தவெக வேட்பாளரிடம் சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருக்கிறார். அந்தத் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றிருக்கிறார்.
சைதாப்பேட்டை தொகுதியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தோல்வியை சந்தித்துள்ளார். சைதாப்பேட்டையில் தவெக வேட்பாளர் அருள் பிரகாசம் வெற்றி பெற்றிருக்கிறார்.
திமுக ஆட்சியில் அவைத் தலைவராக இருந்த அப்பாவு ராதாபுரம் தொகுதியில் தோல்வியை சந்தித்துள்ளார். நெல்லை மாவட்டம் ராதாபுரம் எதொகுதியில் தவெக வேட்பாளர் சதீஷ் கிறிஸ்டோபர் வெற்றி பெற்றிருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நிறைவடையவிருக்கும் நிலையில், திமுக அமைச்சர்கள் பலர் தோல்வியடைந்துள்ளனர்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார். அவரது வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
துறைமுகம் தொகுதியில் தொடக்கம் முதலே அமைச்சர் சேகர்பாபு குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே முன்னிலையில் இருந்து வந்த நிலையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். சேகர்பாபு 10,417 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இரணடாம் இடத்தில் தவெக வேட்பாளர் சினோரா அசோக் உள்ளார்.
திருச்சி மேற்கு தொகுதியில் திமுக அமைச்சர் கே.என். நேரு 4786 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார. தவெக வேட்பாளர் இரண்டாம் இடத்திலும் அமமுக வேட்பாளர் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தோல்வியை சந்தித்துள்ளார். தவெக வேட்பாளர் மாதர் பகுருதீன் வெற்றியை பதிவு செய்திருக்கிறார்.
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் கீதா ஜீவன் தோல்வியை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளரும் விஜய்யின் நண்பருமான ஸ்ரீநாத் வெற்றி பெற்றுள்ளார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் 14,063 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக - 79762, அதிமுக - 52684, தவெக - 65699, நாதக - 6331 வாக்குகள் பெற்றுள்ளன.
மாலை 5 மணி நிலவரப்படி தவெக 107, திமுக 75, அதிமுக 52 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன.
முன்னாள் அமைச்சர்கள்
கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான செந்தில் பாலாஜி 2184 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஆவடி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நாசர் தோல்விமுகம்.
Summary
The Chief Minister and some key ministers in Tamil Nadu have faced defeat.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூடலூரில் திமுக வேட்பாளர் மு. திராவிடமணி வெற்றி

மதுரை தெற்கு தொகுதியில் தவெக கோபிசன் வெற்றி!

6-ஆவது வெற்றியை எதிர்நோக்கும் இபிஎஸ்!

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!
வீடியோக்கள்

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு



