துயரமான ஆட்சி; கும்பகர்ண தூக்கத்தில் அரசு! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!தவெக எம்எல்ஏக்கள் 3 நாள்கள் தனியார் விடுதியில் தங்க ஏற்பாடு?என்ன, நீதா அம்பானி குடிக்கும் தண்ணீர் பாட்டில் விலை ரூ.50 லட்சமா? உண்மை என்ன?ஆண் பல முறை திருமணம் செய்யலாம்! ஆனால்... பவன் கல்யாண் குறித்து ரேணு தேசாய்கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாவம்! மாணிக்கம் தாகூர்இரண்டு முறை புற்றுநோய் பாதிப்பு... முதன்முறையாக மனம் திறந்தார் சோனியா! சுயசரிதை புத்தகத்தில்சென்னையில் நேற்று மட்டும் 147 ரெளடிகள் கைது!ஐபிஎல் டிரேடிங்! பஞ்சாப் கிங்ஸில் இணைந்தார் ஹார்திக் பாண்டியா! மும்பையில் அர்ஷ்தீப்!மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்! நாளை (நவ. 12) இரவுக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்!இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்!2024-ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வு: வனக்காவலா் பதவிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் வெளியீடு!டாஸ்மாக் ஊழியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம்!பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!

சென்னையில் மின்சார பைக் நிறுவன மையம்: திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

மின்சார பைக் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய முதன்மை அனுபவ மையத்தை முதல்வர் ச. ஜோசப் விஜய் திறந்து வைத்தார்.

RAPTEE.HV Flagship Experience Centre Inauguration by cm vijay in chennai

ராப்டி நிறுவனம் மாதிரி மின் பைக்கை முதல்வர் விஜய்யிடம் வழங்கியபோது... - DIPR

Updated On :

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திடம்  (TIDCO - டிட்கோ) ரூ. 25 கோடி முதலீடு பெற்ற Raptee.HV (ராப்டி.ஹெச்வி) நிறுவனத்தின் புதிய முதன்மை அனுபவ மையத்தை முதல்வர் ச. ஜோசப் விஜய் திறந்து வைத்தார்.

இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று (11.11.2026) தலைமைச் செயலகத்தில்,  தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முன்னோடி உயர் மின்னழுத்த மின்சார மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான Raptee.HV (ராப்டி. ஹெச்வி) நிறுவனம், சென்னை, பெருங்குடி, ஓஎம்ஆர் சாலையில் நிறுவியுள்ள மூன்று தளங்களைக் கொண்ட புதிய முதன்மை அனுபவ மையத்தைக் (Flagship Experience Centre) காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். 

Story image

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மணப்பாக்கத்தில் செயல்படும் இந்த நிறுவனம், மின்சாரக் கார் தொழில்நுட்பத்தை இருசக்கர வாகனங்களில் அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக விளங்கும் முழுமையான மின்சார மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமாகும்.

டெஸ்லா, விப்ரோ மற்றும் சர்வதேச வாகனத் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட தமிழ்நாட்டிலுள்ள எம்ஐடி, குரோம்பேட்டை  மற்றும் என்ஐடி, திருச்சி பொறியியல் கல்லூரிகளில் பயின்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியாளர்களால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தனது பிரத்யேக ஹெச்வி டெக் (HV-TEC) தொழில்நுட்பத் தளத்தை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் உயர் மின்னழுத்தத் தொழில்நுட்பத்தை மின்சார மோட்டார் சைக்கிள்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Story image

இந்நிறுவனத்தின் T30, இந்தியாவின் முதல் உயர் மின்னழுத்த மின்சார மோட்டார் சைக்கிள் ஆகும். இது 240V மின்னழுத்தக் கட்டமைப்பையும், மின்சாரக் கார்களுக்கான சிசிஎஸ்2 (CCS2) பொது டிசி (DC) விரைவு மின்னேற்றத் தரநிலையுடன் இணக்கத்தன்மையையும் கொண்டுள்ளது.

இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கிடவும், ஏற்கெனவே செயல்பட்டுவந்த தொழிற்சாலை விற்பனை மையத்திலிருந்து மேம்பட்டு, வாடிக்கையாளர்கள் மோட்டார் சைக்கிளை முழுமையாக அறிந்து உணரும் வகையில் இப்புதிய அனுபவ மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இங்கு வாடிக்கையாளர்கள் மோட்டார் சைக்கிளை நேரில் பார்வையிடுவதுடன், அதன் 240V உயர் மின்னழுத்தக் கட்டமைப்பு மற்றும் அதனை இயக்கும் நவீன தொழில்நுட்பங்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம். மேலும், நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவினருடன் கலந்துரையாடவும், சோதனை ஓட்டம் மேற்கொண்டு மோட்டார் சைக்கிளின் செயல்திறன் குறித்த அனுபவத்தை நேரில் பெறுவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் புது யுகப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் தனது புதிய ஸ்டார்ட்அப் முதலீட்டுக் கொள்கையைப் பயன்படுத்தி, தொடக்கமாக ராப்டி நிறுவனத்தில் 25 கோடி ரூபாய் கட்டாய மாற்றத்தக்க முன்னுரிமைப் பங்குகள் (Compulsory Convertible Preferential Shares – CCPS) முறையில் முதலீடு செய்துள்ளது. மேலும், அக்னிகுல் காஸ்மோஸ் (Agnikul Cosmos) மற்றும் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்யவுள்ளது. 

இந்நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர்
ச. கீர்த்தனா, தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார்,  தொழில், துறைசார் அதிகாரிகள்  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Summary

RAPTEE.HV Flagship Experience Centre Inauguration by cm vijay in chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER