சென்னையிலேயே இப்படி ஒரு அசம்பாவிதம்; இது முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறமையின்மை! இபிஎஸ்தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி டிஜிபியிடம் திமுக புகார்!அரவிந்த் கேஜரிவாலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல்!அன்பில் மகேஸ் வழக்கு! முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு 5 நாள்கள் போலீஸ் காவல்!மதுரை பிரபல நகைக் கடையில் 500 சவரன் கொள்ளை!9.5 சிஜிபிஏ மாணவர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசனம்! விநோத அறிவிப்பை வெளியிட்ட கல்லூரிபுதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! 22 பயணிகள் காயம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை! பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு?ஜம்முவில் காணாமல்போன சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு!நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!சம்பா நெற்பயிா்க் காப்பீட்டு காலவரம்பு டிச. 1 வரை நீட்டிப்புஉபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

போலி நூல் கொள்முதல் மொத்த மதிப்பு என்ன? யார், யாருக்கு தொடர்பு? -வெள்ளை அறிக்கை வெளியிடுக: அன்புமணி

பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல்களை வாங்கியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக...

Rs 30 per kg is the reason for the scheme's failure

அன்புமணி - கோப்புப் படம்

Updated On :

போலி நூல் கொள்முதல் ஊழலில் மொத்த மதிப்பு என்ன? யார், யாருக்கு தொடர்பு? என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அன்புமணி சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல்களை வாங்கியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக ஒவ்வொரு நாளும் வெளியாகி வரும் செய்திகள் அதிர்ச்சியும், கவலையும் அளிப்பவையாக உள்ளன. நூல் கொள்முதலில் கூட ஊழல் செய்வார்களா? என நாடு முழுவதும் தமிழகத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்த அனைத்து உண்மைகளையும் வெளியிட்டு ஊழல்வாதிகளை அம்பலப்படுத்த வேண்டும்.

கோவையில் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டு, கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பெருமளவில் ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக கடந்த 6 ஆம் தேதி குற்றச்சாட்டுகள் எழுந்தன. பதிப்பக உலகில் பெரிய அளவில் பேசப்படாத, தென்னிந்திய பதிப்பாளர் சங்கத்தில் கூட பதிவு செய்யப்படாத அகல்விளக்கு பதிப்பகம், பீனிக்ஸ் பதிப்பகம் ஆகிய இரு பதிப்பகங்களில் இருந்து தான் மிக அதிக எண்ணிக்கையில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டன என்பதும், அந்நூல்கள் அனைத்தும் இல்லாத நபர்களின் கற்பனை பெயர்களில், செயற்கை அறிவுத்திறன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்பதும் கடந்த சில நாள்களில் வெளியான அதிர்ச்சியூட்டும் செய்திகள்.

கோவை பெரியார் அறிவுலகத்திற்காக நூல்களை கொள்முதல் செய்வதில் மட்டுமே ஊழல் நடைபெற்றதாக நம்பப்பட்ட நிலையில், தென்காசியில் புதிதாக கட்டப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி திறக்கப்பட்ட தென்காசி மத்திய நூலகத்தில் மட்டும் அகல்விளக்கு பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்ட சுமார் 2200 போலி நூல்கள் அடையாளம் காணப்பட்டு அகற்றப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவற்றில் பெரும்பாலான நூல்களில் விலைகள் ரூ.1000-க்கும் அதிகம் என்றும், இதற்காக அகல்விளக்கு பதிப்பகத்திற்கு மட்டும் ரூ.27 லட்சம் வழங்கப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. திமுக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட இந்த நூல்களுக்கு அவசர, அவசரமாக பணம் வழங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2018-19ஆம் ஆண்டுகளில் புதிதாக திறக்கப்பட்ட 6 புதிய மாவட்டங்களில் மாவட்ட மத்திய நூலகங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டு தென்காசி, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிய நூலகங்கள் திறக்கப் பட்டுள்ளன. தென்காசி மட்டுமின்றி, மற்ற நூலகங்களுக்கு கொள்முதல் செய்யப்பட்ட நூல்களில் பெரும்பாலானவை அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தால் பதிக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. சென்னை கன்னிமாரா நூல்கம் தொடங்கி கிராமங்களில் உள்ள கிளை நூல்கங்கள் வரை எங்கும் அகல்விளக்கு பதிப்பக நூல்கள் தான் நிறைந்து காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த ஊழலால் தமிழகத்திற்கு பெரும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

போலி நூல்கள் கொள்முதல் விவகாரத்தில் அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்படும் என்றும், குற்றவாளிகள் தப்ப முடியாது என்றும் அரசுத் தரப்பில் மீண்டும், மீண்டும் கூறப்படும் போதிலும், இந்த ஊழல் தொடர்பான தகவல்களை வெளியிடவில்லை; முதல் தகவல் அறிக்கையும் இன்னும் பதிவாகவில்லை.

இந்த ஊழல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, தமிழக அரசுக்கு சில கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்ததைத் தொடர்ந்து தான், அகல்விளக்கு பதிப்பகத்திற்கு சொந்தமான 3 வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.22 லட்சம் முடக்கப்பட்டுள்ளது. இதுவரை முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில், விரைவில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாக தமிழக அரசின் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

போலி நூல்கள் கொள்முதலில் அகல் விளக்கு பதிப்பகம், பீனிக்ஸ் பதிக்கப்பகம் ஆகியவை தவிர மேலும் பல பதிப்பகங்கள் சம்பந்தப்பட்டிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. நூல்கள் கொள்முதல் செய்யப் பட்டதில் மட்டுமின்றி, நூலகங்கள் கட்டப்பட்டதிலும் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்ட எவரும் தப்புவதற்கு அனுமதிக்கக் கூடாது.

போலி நூல்கள் கொள்முதல் ஊழல் வாயிலாக கொள்ளையடிக்கப்பட்ட பணம் முழுவதும் தமிழக மக்களின் வரிப் பணம் ஆகும். அதனால், இந்த ஊழல் குறித்த அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ளும் உரிமை தமிழக மக்களுக்கு உள்ளது. இந்த ஊழலால் வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுள்ளது. அதைத் துடைக்க இந்த ஊழலில் தொடர்புடைய பதிப்பாளர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்த வேண்டியது தமிழக அரசின் முதன்மைக் கடமை. அந்தக் கடமையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

மக்கள் மற்றும் மாணவர்களின் அறிவை வளர்க்க வேண்டிய நூலகங்களுக்கு நூல்களை கொள்முதல் செய்வதில் ஊழலை நடத்தியது மட்டுமின்றி, தரமற்ற போலி நூல்களைக் கொள்முதல் செய்து அறிவை மழுக்கடிக்கும் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. எனவே, தமிழ்நாட்டில் எந்தெந்த நூலகங்களுக்கு அகல்விளக்கு பதிப்பகம், பீனிக்ஸ் பதிப்பகம் போன்ற பதிப்பகங்களில் இருந்து எவ்வளவு நூல்கள் வாங்கப்பட்டன? அவற்றின் மதிப்பு என்ன? அவற்றை வாங்குவதற்காக பரிந்துரைத்தவர்கள் யார்? அதனடிப்படையில் கொள்முதல் அனுமதி வழங்கியவர்கள் யார்? என்பன உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்; இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.