விலகிச் சென்ற அக்வான் புயல்! கரையைக் கடக்கும் இடம் மீண்டும் மாற்றம்!
அக்வான் புயல் கரையைக் கடக்கும் இடம் குறித்து வெளியான தகவல்.

அக்வான் புயல் நெல்லூர் - விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நரசப்பூர் - புரி இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் திங்கள்கிழமை நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ‘அக்வான்’ புயலாக வலுப்பெற்று தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவியது.
இது, செவ்வாய்க்கிழமை வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அதே பகுதியில் நிலவியது. மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் தீவிர புயலாக இன்று பெற்றது.
இந்த நிலையில் இது, மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, வெள்ளிக்கிழமை (நவ. 20) நரசப்பூர் மற்றும் புரி இடையே தீவிரப் புயலாக கரையைக் கடக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அக்வான் புயலானது நெல்லூர் மற்றும் துனி இடையே கரையைக் கடக்கும் என்றும், பின்னர் நெல்லூர் - விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல, அக்வான் புயல் மிக தீவிர புயலாக கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தீவிர புயலாக கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்வான் புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்தப் புயல் சென்னைக்கு (தமிழ்நாடு) கிழக்கே சுமார் 570 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தெற்கு-தென்கிழக்கே 580 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தென்கிழக்கே 590 கி.மீ தொலைவிலும், திருகோணமலைக்கு (இலங்கை) வடகிழக்கே 660 கி.மீ தொலைவிலும், கோபால்பூருக்கு (ஒடிசா) தெற்கே 710 கி.மீ தொலைவிலும் மற்றும் புரிக்கு (ஒடிசா) தெற்கே 770 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
While it was previously reported that Cyclone would make landfall between Tuni and another location, the India Meteorological Department has now stated that it will cross the coast near Puri.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


