திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!பஞ்சாப் தேர்தல்! பாஜக - சிரோமணி அகாலி தளம் கூட்டணி அறிவிப்பு!திருப்பரங்குன்றம்: வழக்கமான இடத்தில் மகா தீபம் ஏற்றுவதற்கான பணிகள் தீவிரம்மதுரை புறப்பட்ட நயினார் நாகேந்திரன் கைது!தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!அருள் விக்னேஷ் மீது புகார் கொடுத்தது முதல்வருக்குத் தெரியுமா? தெரியாதா? மு.க. ஸ்டாலின் கேள்விகார்த்திகை தீபம்! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தாமிரக் கொப்பரை!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான உத்தேச விடைக்க்குறிப்பு வெளியானது குறித்து...

கோப்புப் படம்

Updated On :

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு செவ்வாய்க்கிழமை (அக். 6) வெளியானது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், துணை ஆட்சியர், வணிக வரி உதவி ஆணையர் உள்ளிட்ட 46 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல்நிலைத் தோ்வு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (செப். 27) நடைபெற்றது. இந்தத் தேர்வினை தமிழகம் முழுவதுமுள்ள லட்சக்கணக்கான தேர்வர்கள் எழுதினர்.

இதையடுத்து விடைக்குறிப்புக்காக தேர்வர்கள் காத்திருந்த நிலையில், உத்தேச விடைக் குறிப்புகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வெழுதியவர்கள் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று விடைக் குறிப்புகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உத்தேச விடைகளுக்கான மறுப்புகள் மற்றும் கருத்துகள் ஆகியவற்றை இணைய வழியில் மட்டுமே தெரிவிக்க வேண்டும். இதற்கான கால அவகாசம் வரும் அக். 13 மாலை 05.45 வரை வழங்கப்பட்டுள்ளது. இதன்பிறகு, பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது என டிஎன்பிஎஸ்சி குறிப்பிட்டுள்ளது.

Summary

The tentative answer key for the TNPSC Group 1 preliminary examination was released on Tuesday (Oct. 6).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.