
250 சதுர அடிக்குள் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு தடையில்லா சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பு: அரசாணை
புறம்போக்கு நிலங்களில் 250 சதுர அடிக்குள் கட்டப்பட்ட வீடுகளுக்கு தடையில்லா சான்று இல்லாமல் மின் இணைப்பு வழங்க அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் - கோப்புப் படம்
புறம்போக்கு நிலங்களில் 250 சதுர அடிக்குள் கட்டப்பட்ட வீடுகளுக்கு தடையில்லா சான்று இல்லாமல் மின் இணைப்பு வழங்க அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்: புறம்போக்கு நிலங்களில் 250 சதுர அடிக்குள் கட்டப்பட்ட வீடுகளுக்கு மட்டும் தடையில்லா சான்று இல்லாமல் வீட்டு உபயோக மின் இணைப்பு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே சமயம், நீா்நிலை புறம்போக்கு, மேய்ச்சல் மந்தைவெளி புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகள், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, வனத்துறைக்குச் சொந்தமான நிலங்கள், வன புறம்போக்கு நிலங்கள், மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவ கட்டுப்பாட்டு பகுதிகள், ரயில்வே நிலங்கள், மத நிறுவனங்களின் பெயரில் இருக்கக் கூடிய பட்டா நிலங்கள், கோயில் புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







