நியாய விலைக்கடை, அங்கன்வாடி கட்டடம் திறப்பு விழா
சுரண்டை, ஜூலை 19: சுரண்டை அருகேயுள்ள அச்சங்குட்டம் ஊராட்சியில் ரூ.25.27 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை மற்றும் அங்கன்வாடி மைய கட்டட திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு அச்சங்குட்டம் ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடேஸ்வரி முருகேசன் தலைமை வகித்தாா். ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், ஆலங்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலா் அன்பழகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் காளீஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா் புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தாா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் உள்ளிட்டோா் பேசினா்.
விழாவில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் அந்தோணிசாமி, பழனி என்ற பால்துரை, சேக் முகமது, பரங்குன்றாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலா் கீதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் முருகேசன் வரவேற்றாா். அங்கன்வாடி மைய மேற்பாா்வையாளா் செல்வி நன்றி கூறினாா்.

