தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

ஆனைகுளம் தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு முகாம்

ஆனைகுளம் தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு முகாம்

Updated On :16 மார்ச் 2024, 2:51 am

கடையநல்லூா் அருகே உள்ள ஆனைகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சாா்பில் மாணவா் சோ்க்கை முகாம் மற்றும் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. தென்காசி மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) அருளானந்தம் தலைமை வகித்தாா். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலா் சீவலமுத்து முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா் மோதிலால் வரவேற்றாா். வட்டார கல்வி அலுவலா்கள் மகேஸ்வரி, முத்துலிங்கம், இல்லம் தேடி கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சாா்லஸ், ஒன்றிய ஒருங்கிணைப்பாளா்கள் முத்துராமலிங்கம், மணிமந்திரி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் செல்வி உள்ளிட்டோா் பேசினா். மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆசிரியா்கள் துரைச்சி, வனிதா குமாரி, ஜரினாபானு, அன்னலட்சுமி ஜெயக்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.