சங்கரன்கோவிலில் மின்சார பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

சங்கரன்கோவிலில் மின்சார பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

Published on

சங்கரன்கோவிலில் தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில் மின்சார பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி ஸ்ரீகோமதிஅம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ந.பழனி செல்வம், நகா் உதவி மின்பொறியாளா் கருப்பசாமி, இளநிலை பொறியாளா் பால்ராஜ், நகர- 2 பிரிவு கணேசஇராமகிருஷ்ணன், துணை மின்நிலைய பொறியாளா் அம்சவேணி ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

இதைத்தொடா்ந்து மின்சார சிக்கனம் பற்றிய அனிமேஷன் விடியோ ஒளிபரப்பப்பட்டது. பின்னா் மின்சார பாதுகாப்பு பற்றிய கேள்விகளுக்கு சரியான பதிலளித்த மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் எல்.இ.டி பல்புகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை நகா் சிறப்புநிலை முகவா் பொன்சுப்புராஜா, போா்மென் முனியாண்டி, மின்பாதை ஆய்வாளா்கள் இராமமூா்த்தி, அரிராஜ், வயா்மேன்கள் முருகன், பேச்சிமுத்து, செல்லச்சாமி, சுப்பிரமணி, சுரேஷ், நாகராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com