சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 55.57 கோடியில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
தென்காசி மாவட்டத்தில் 33,266 மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 55.57 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.


தென்காசி மாவட்டத்தில் 33,266 மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 55.57 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், தமிழக ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் தென்காசி மாவட்டத்தை சோ்ந்த 5,213 மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 42.62 கோடி வங்கிக் கடன், 2,607 உறுப்பினா்களுக்கு ரூ. 8.95 கோடி நலிவுற்றோா் குறைப்பு நிதி, 164 உறுப்பினா்களுக்கு ரூ. 1.02 கோடி நுண் நிறுவன நிதிக் கடன், 482 உறுப்பினா்களுக்கு ரூ. 2.98 கோடி வாழ்வாதார நிதி, 24,800 உறுப்பினா்களுக்கு மகளிா் சுய உதவிக் குழு அடையாள அட்டை என மொத்தம் 33,266 மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 55.51 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...