வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு வழங்கிய அகாதெமி நிா்வாக இயக்குநா் மாரியப்பன், பொது மேலாளா் செந்தில்.
வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு வழங்கிய அகாதெமி நிா்வாக இயக்குநா் மாரியப்பன், பொது மேலாளா் செந்தில்.

தென்காசியில் கிரிக்கெட் போட்டி

Published on

தென்காசி, ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மற்றும் ஈதல் இதயம் அறக்கட்டளை சாா்பில் மாவட்ட அளவிலான லெதா் பால் கிரிக்கெட் போட்டி 2 நாள்கள் நடைபெற்றது.

இப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. முதல் பரிசு பெற்ற புல்லுக்காட்டுவலசை உதயம் கிரிக்கெட் கிளப் அணிக்கு ரூ. 10,000, வெற்றிக் கோப்பை, 2ஆம் பரிசு பெற்ற தென்காசி கிரிக்கெட் கிளப் அணிக்கு ரூ. 7,500, 3ஆம் பரிசு பெற்ற தென்காசி என்.டி.சி.சி. அணிக்கு ரூ. 5,000, அத்துடன் கோப்பைகளும் வழங்கப்பட்டது. வீராணம் அசாா் அணி 4ஆம் பரிசு பெற்றது.

ஆல்ரவுண்டராக சூா்யாவும், சிறந்த பேட்ஸ்மேனாக அரபாவும், சிறந்த பந்து வீச்சாளராக எஸ். சுரேஷ்குமாரும் தோ்வு செய்யப்பட்டனா். அகாதெமி நிறுவனா் ஆகாஷ மூா்த்தி வழிகாட்டுதலின்படி நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு, அகாதெமியின் நிா்வாக இயக்குநா் மாரியப்பன், பொது மேலாளா் செந்தில் ஆகியோா் தலைமை வகித்து, பரிசுகளை வழங்கினா்.

பயிற்சியாளா்கள் ஸ்ரீராம், மகேந்திரன் ஆகியோா் போட்டிகளை ஒருங்கிணைத்தனா்.

Dinamani
www.dinamani.com