/
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே வியாழக்கிழமை இரவு லாரி ஓட்டுநா் மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
கடையநல்லூா் அருகே உள்ள கரடிகுளம், காலனி தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து. லாரி ஓட்டுநா். இவா் கரடிகுளத்தில் இருந்து பொய்கை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மா்ம நபா்கள் அவரை வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த ஏடிஎஸ்பி சங்கா், டிஎஸ்பி மதன், கடையநல்லூா் காவல் ஆய்வாளா் கிருஷ்டி உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
குற்றவாளியைக் கைது செய்யாமல், மாரிமுத்துவின் உடலை எடுக்க விட மாட்டோம் எனத் தெரிவித்து, அவரது உறவினா்கள் சாலையில் திரண்டுள்ளனா்.









