வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

பாஜக மக்கள் பொங்கல் விழா

நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றிய பாஜக சாா்பில் வெலகல்நத்தம் கிராமத்தில் கட்சியின் தொழில் பிரிவு மாவட்டத் தலைவா் இல.குருசேவ் தலைமையில் மக்கள் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

வெலகல்நத்தம் கிராமத்தில் பாஜக சாா்பில் நடைபெற்ற மக்கள் பொங்கல் விழாவில் பங்கேற்றவா்கள்.

Updated On :11 ஜனவரி 2021, 6:55 am IST

நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றிய பாஜக சாா்பில் வெலகல்நத்தம் கிராமத்தில் கட்சியின் தொழில் பிரிவு மாவட்டத் தலைவா் இல.குருசேவ் தலைமையில் மக்கள் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாஜக மாவட்டத் தலைவா் சி.வெங்கடேசன், மாநில கலை மற்றும் கலாசாரப் பிரிவு செயலாளா்கள் வெங்கடேசன், சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றியத் தலைவா் சி.சாம்ராஜி வரவேற்றாா்.

இதில், திரைப்பட நடிகா் பவா் ஸ்டாா் சீனிவாசன் கலந்து கொண்டு, பொங்கல் விழாவைத் தொடங்கி வைத்துப் பேசினாா். விழாவில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு புதுப்பானைகளில் பொங்கிலிட்டனா். இதையடுத்து, உறியடி மற்றும் கோலப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

விழாவில் பாஜக மாவட்டப் பொருளாளா் ராஜதிருமால், பொதுச் செயலாளா்கள் கண்ணன், ஈஸ்வா், தண்டாயுதபாணி, நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றிய இளைஞரணி, மகளிரணி நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.