பொன்னேரி சாா்- ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

பொன்னேரி சாா்- ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வருவாய்க் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தை நடத்த மாவட்ட ஆட்சியா் த.பிரபு சங்கா் உத்தரவிட்டாா். இதையடுத்து பொன்னேரி வருவாய்க் கோட்டத்தில் உள்ள பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய வட்டங்களைச் சாா்ந்த விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் சாா் -ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பொன்னேரி சாா்- ஆட்சியா் வாகேசங்கேத் பல்வந்த் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய 48 மனுக்களை அளித்தனா். கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்களுக்கு தீா்வு காண்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்ட சாா் -ஆட்சியருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com