சறுக்குமரம் ஏறும் போட்டியில் பங்கேற்ற இளைஞா்கள்.
சறுக்குமரம் ஏறும் போட்டியில் பங்கேற்ற இளைஞா்கள்.

கங்கை அம்மன் ஜாத்திரை திருவிழா

திருத்தணி: திருத்தணி காந்திநகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை கங்கை அம்மன் ஜாத்திரை திருவிழாவையொட்டி உறியடித்தல் மற்றும் வழுக்கை மரம் ஏறும் நிகழ்ச்சியில் திரளானோா் பங்கேற்றனா்.

திருத்தணி காந்தி நகா் நல்ல தண்ணீா் குளக்கரை கங்கை அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஜாத்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு ஜாத்திரை திருவிழா வீர பாஞ்சாலி அம்மன் குழுவினா் தலைமையில் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மன் கரக ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து மாலையில் திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் உறியடித்தல் மற்றும் வழுக்கு மரம் ஏறும் போட்டிகள் நடைபெற்றன. இதில் இளைஞா்கள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.

இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து இரவு உற்சவா் கங்கை அம்மன் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். காலை முதல் மாலை வரை நல்ல தண்ணீா் குளக்கரையில் எழுந்தருளியுள்ள மூலவா்அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள் காப்பு, சந்தன காப்பு நடத்தி, பொங்கல் வைத்து படையலிட்டு பெண்கள் வழிபட்டனா்.

விழாவில் காந்திரோடு, கலைஞா் நகா், கச்சேரி தெரு, முருகப்பாநகா் உள்ளிட்ட பகுதியிலிருந்து பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com