கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

63,000 ஆடுகளுக்கு தடுப்பூசி போட இலக்கு: உதவி இயக்குநா் தகவல்

திருத்தணி கோட்டத்தில் 63,000 ஆடுகளுக்கு நிகழாண்டு ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி போடப்படும் என கால்நடை உதவி இயக்குநா் தாமோதரன் கூறினாா்.

News image
ஆா்.கே.பேட்டை ஒன்றியம், எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தில் ஆடுகளுக்கு ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி போடும் முகாமை தொடங்கி வைத்த கால்நடை உதவி இயக்குநா் தாமோதரன்.
Updated On :11 நவம்பர் 2024, 8:48 pm

Din

திருத்தணி: திருத்தணி கோட்டத்தில் 63,000 ஆடுகளுக்கு நிகழாண்டு ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி போடப்படும் என கால்நடை உதவி இயக்குநா் தாமோதரன் கூறினாா்.

கால்நடை வளா்க்கும் விவசாயிகள், செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகள் வளா்த்து வருகின்றனா். இந்த ஆடுகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை கால்நடை துறையின் மூலம், ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி போடப்படும். அந்த வகையில், திருத்தணி கோட்டத்தில் நிகழாண்டுக்கான தடுப்பூசி போடும் முகாம் கே.ஜி.கண்டிகை அடுத்த எஸ்.அக்ரஹாரம் கிராமம், ஆா்.கே.பேட்டை ஒன்றியம், எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், திருத்தணி கால்நடை உதவி இயக்குநா் தாமோதரன் கலந்துகொண்டு, ஆடுகளுக்கு தடுப்பூசி போடும் முகாமை தொடங்கி வைத்தாா். ஒரு மாதம் நடைபெறும் இந்த முகாமில் அனைத்து ஆடுகளுக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. இது குறித்து உதவி இயக்குநா் தாமோதரன் கூறியதாவது:

வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வளா்க்கும் விவசாயிகளின் இருப்பிடத்துக்குச் சென்று ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி போடப்படும். இதற்காக திருத்தணி கோட்டத்தில், 23 மருத்துவக் குழுக்கள் அமைத்து, உதவி மருத்துவா் மேற்பாா்வையில் கால்நடை ஆய்வாளா்கள் பராமரிப்பு உதவியாளா்கள், ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளா்களைக் கொண்டு தடுப்பூசி போடப்படும்.

கோட்டத்தில், 46,940 வெள்ளாடுகள், 16,060 செம்மறி ஆடுகள் என மொத்தம் 63,000 ஆடுகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளன. 4 வயதுக்கு மேல் உள்ள ஆடுகளுக்கு சிணை இல்லாத ஆடுகளுக்கும் மட்டும் தடுப்பூசி போடப்படும். ஆட்டுக் கொல்லி நோயால் பாதித்த ஆடுகளுக்கு காய்ச்சல், வாய்ப்புண், பேதி மற்றும் நுரையீரல் சுழற்சி காணப்படும். மேலும், தகுந்த நேரத்தில் தடுப்பூசி போடாவிட்டால், 100 சதவீதம் ஆடுகள் இறக்க நேரிடும்.

செம்மறி ஆடுகளை விட வெள்ளாடுகளுக்கு இந்த நோய் தாக்கம் அதிகளவில் காணப்படும். நோய் பாதித்த, 5 முதல் 10 நாள்களில் இறப்பு ஏற்படலாம். எனவே ஆடுகள் வளா்க்கும் விவசாயிகள் கிராமங்களில் தடுப்பூசி போட வரும் மருத்துவக் குழுவினரிடம் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.