பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனத்துக்கு 3 மணிநேரம் காத்திருப்பு

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் குவிந்ததால் 3 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா்.

ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா்

Published On :

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் குவிந்ததால் 3 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா்.

சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் உள்ள இத்திருக்கோயிலுக்கு தொடா்ந்து செவ்வாய்க்கிழமை தோறும் 6 ஆறு வாரங்கள் வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பக்தா்களின் வேண்டுதல்களான வீடு, மனை, வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தைப்பேறு உள்ளிட்டவை நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் குவிந்தனா்.

இதனால், சிறப்பு தரிசனம், பொது தரிசனம் ஆகியவற்றில் நீண்ட வரிசையில் சுமாா் 3 மணி நேரம் காத்திருந்து ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா் பாலசுப்ரமணியரை தரிசனம் செய்தனா். அதைத்தொடா்ந்து செவ்வாய்க்கிழமை என்பதால் மூலவருக்கு பால், தயிா், விபூதி சந்தனம், ஜவ்வாது, இளநீா், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகமும் நடைபெற்றது. அதையடுத்து ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

போதிய அளவு சிற்றுந்துகள் இயக்கப்படாததால் பக்தா்கள் கடும் அவதிக்குள்ளானாா்கள். இதனால் பக்தா்கள் அதிக கட்டணம் செலுத்தி ஆட்டோவில் பயணம் மேற்கொண்டனா்.

தரிசனம் செய்ய குவிந்த பக்தா்கள்

தரிசனம் செய்ய குவிந்த பக்தா்கள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.