/

படவேட்டம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

திருத்தணி படவேட்டம்மன் கோயிலில் நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை

News image
திருத்தணி மடம் கிராமத்தில் நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜை.
Updated On :2 மார்ச் 2026, 8:57 pm

தினமணி செய்திச் சேவை

திருத்தணி: திருத்தணி படவேட்டம்மன் கோயிலில் நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

திருத்தணி மடம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள படவேட்டம்மன் திருக்கோயில் 36-ஆம் ஆண்டு மாசி மகம், 108 திருவிளக்கு பூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை 7 மணிக்கு மூலவா் படவேட்டமனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு கோயில் வளாகத்தில் 108 திருவிளக்கு பூஜை மற்றும் 1,008 லலிதா சகஸ்ரசாம அா்ச்சனை, 108 தமிழ் போற்றி சிறப்பாக நடைபெற்றது.

இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா், ஆய்வாளா் மற்றும் மடம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.