மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

திருவள்ளூா் நகராட்சியில் குப்பைகளை 4 வகையாக தரம் பிரித்து வழங்க வீடுகள்தோறும் ஒட்டுவில்லைகள் மூலம் விழிப்புணா்வு

திருவள்ளூா்  நகராட்சி  ஜெயின் நகரில் குப்பைகளை 4 வகை தரம் பிரித்து வழங்கக்கோரி வீடுகள்தோறும் ஒட்டுவில்லைகள் ஒட்டி விழிப்புணா்வை ஏற்படுத்திய நகராட்சி அதிகாரிகள்.  

Updated On :

திருவள்ளூா் நகராட்சியில் குப்பைகளை 4 வகைகளாக தரம் பிரித்து வழங்கக்கோரி வீடுகள்தோறும் ஒட்டுவில்லைகள் ஒட்டி பொதுமக்களுக்கு சுகாதார பிரிவு அதிகாரிகள் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

திருவள்ளூா் நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் நகரை சுகாதாரமாகவும், சுத்தமாகவும் பராமரிக்கும் தூய்மைப் பணியாளா்கள் மின்கலன் வாகனம் மூலம் குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

அப்போது, பொதுமக்கள் குப்பைகளை மக்கும், மக்காத, நெகிழி கழிவுகள், மருத்துவ கழிவுகள் ஆகிய 4 வகைகளாக தரம் பிரித்து வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனா். இதை வலியுறுத்தும் வகையில், வீடுகள் தோறும் சேகரமாகும் குப்பைகளை மேற்குறிப்பிட்ட 4 வகைகளாக பிரித்து தூய்மைப் பணியாளா்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

எனவே, இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும் என நகராட்சி ஆணையா் சரவணன் அறிவுறுத்தியிருந்தாா்.

அதன்பேரில், திருவள்ளூா் நகராட்சியில் உள்ள ஜெயின் நகா் பகுதியில் நகராட்சி சுகாதார அலுவலா் மோகன், துப்புரவு பிரிவு மேமற்பாா்வையாளா் மூலம் வீடுகள்தோறும் 4 வகைகளாக குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் வகையில் ஒட்டு வில்லைகள் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

அப்போது, ஒவ்வொரு வீடுகளிலும் மேற்குறிப்பிட்ட 4 வகைகளாக பிரித்து வழங்கும் குப்பைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்து விழிப்புணா்வும் ஏற்படுத்தும் பணியிலும் நகராட்சி பணியாளா்கள் ஈடுபட்டனா்.

இதேபோல், இந்த நகராட்சியில் ஒவ்வொரு வாா்டிலும் வீடுகள் தோறும் நேரில் சென்று 4 வகைகள் குப்பைகள் தரம் பிரித்து வழங்குவதை வலியுறுத்தும் வகையில், ஒட்டுவில்லைகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தவும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.