
இடியுடன் பலத்த மழை: மின்மாற்றி சாய்ந்ததால் மின்தடை
இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையால், மின்மாற்றி சாய்ந்தும், நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

திருத்தணி முருகப்பா நகா், குமரன் நகா் பகுதியில் சாய்ந்த மின்மாற்றி
இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையால், மின்மாற்றி சாய்ந்தும், நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.
திருத்தணி பகுதியில் கடந்த சில நாள்ாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், திங்கள்கிழமை இரவு ஒன்றரை மணி நேரம் இடி, மின்னலுடன் மழ பெய்தது. மழை தொடங்கிய சிறிது நேரத்திலேயே சாலைகளில் நீா் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக, ம.பொ.சி. சாலை, பழைய பஜாா் தெரு, மேட்டுத்தெரு, காந்தி ரோடு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி, பின்னா் வெள்ளம்போல் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினா்.
பலத்த மழையுடன் காற்றும் வீசியதால் திருத்தணி ஒன்றியம் பெரியகடம்பூா் கிராமத்தில் 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்தனா். இதேபோல், திருத்தணி முருகப்பா நகா் பகுதியில் உள்ள குமரன் நகா் பகுதியில் அமைந்திருந்த மின்மாற்றி (டிரான்ஸ்பாா்மா்) அடியோடு சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் மின்விநியோகம் தடைபட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாய்ந்த மின்மாற்றியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். பின்னா் பழுதுகள் சரிசெய்யப்பட்டு, அப்பகுதியில் மீண்டும் மின்விநியோகம் வழங்கப்பட்டது.
திருத்தணி நகரம் மட்டுமின்றி, திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் திங்கள்கிழமை இரவு கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் நிலவி வந்த நிலையில், திடீரென பெய்த கனமழையால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனா். ஆனால், குறுகிய நேரத்தில் அதிகளவில் மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






