பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் இணையதளம் அனிமேஷன் பி.என்.ஜி படங்களை பதிவிட தடை விதித்துள்ளது.
ட்விட்டர் நிறுவனம் சமீபத்தில் தங்களது தளத்தில் 'பக்'(bug) ஒன்றை கண்டறிந்துள்ளதாகவும், இதன் காரணமாக அனிமேஷன் செய்யப்பட்ட பி.என்.ஜி கோப்புகளை பதிவிட தடை விதிப்பதாவும் அறிவித்துள்ளது. அதாவது, அனிமேஷன் செய்யப்பட்ட பி.என்.ஜி கோப்புகளை பயன்படுத்தி ஒரே ட்வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை பதிவிட முடியும்.
இதனைத் தொடர்ந்து உபயோகிப்பதால் பயனர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் ட்விட்டர் தளத்தில் 'பக்' ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே, இனிமேல் இதுபோன்றவற்றை தவிர்க்க, ட்விட்டர் தளத்தில் பி.என்.ஜி படங்களை அனுமதிக்க முடியாது என்று அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ட்விட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் மிகவும் பாதுகாப்பாக தங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளது.